
செம்மொழி மாநாட்டிற்கு பிறகு கோவை :
தீப ஒளி திருநாளுக்கு வீட்டுக்குச் சென்ற என்னை அசர வைத்தது கோவை...!!!!
அரை வழிச் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் இப்போது
ஆறு வழிச் சாலைகளில் பறந்தன,
ஊரெங்கும் ஓங்கி நிற்கும் புதிய விளக்கு கம்பங்கள்,
புதுப்பிக்கப்பட்ட சிக்னல்கள் ,
நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்,
சாலை ஓர நடை பாதைகள்,
விளக்கு வெளிச்சத்தில் பூத்து குலுங்கும் பூங்காக்கள் ,
விமான நிலையத்தின் தூய்மைக்கு நிகரான புதிய பேருந்து நிலையம்,
இதை எல்லாவற்றையும் விட அசத்தியது இந்த சம்பவம் , " சுமார் 70 வயது முதிர்ந்த முதியவர் ஒருவர்
வாழைப்பழம் உண்ட பின்பு அதன் தோலை , 30 அடி நடந்து சென்று குப்பை தொட்டியில் போட்டது !!! "
"சிங்காரச்சென்னை என்பது இன்றும் சென்னை மக்களின் கனவாகவே இருக்கிறது , ஆனால்
சிங்காரக்கோவை என்பது நடந்து முடிந்த நிகழ்வு"
செம்மொழி மாநாட்டினால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ , கோவை வெகு வேகமாக வளர்ந்து முன்னேறி விட்டது ...
தமிழ் வாழ்க!!!
----- புலவர் பொன்னி
yes na !!
ReplyDelete"சிங்காரச்சென்னை என்பது இன்றும் சென்னை மக்களின் கனவாகவே இருக்கிறது , ஆனால்
சிங்காரக்கோவை என்பது நடந்து முடிந்த நிகழ்வு"
absolutely!!
inga AC bus vita angeyum paka pottu yechaya thuparanunga ..
coimbatore ppl rocks.